மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது - தேர்தல் ஆணையம் விளக்கம்


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது -  தேர்தல் ஆணையம் விளக்கம்
x
தினத்தந்தி 21 Jan 2019 2:40 PM GMT (Updated: 2019-01-21T20:10:17+05:30)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்த அமெரிக்க வாழ் இந்தியரும், சைபர் பிரிவு நிபுணருமான சையத் சுஜா,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும், 2014-ம் ஆண்டு தேர்தலில் ஹேக் செய்யப்பட்டது.  2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலிருந்து டெல்லி மாநில தேர்தல் தவிர பெருவாரியான தேர்தல்களில் ஹேக் செய்ய முடிந்தது எனவும் குறிப்பிட்டார். நம்முடைய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். இதற்கிடையே ஹேக் செய்யப்படும் என்பதை இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. 
 
 எங்களிடம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்வோம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story