ரேபரேலி தொகுதிக்கு சோனியா காந்தி பயணம் ரத்து


ரேபரேலி தொகுதிக்கு சோனியா காந்தி பயணம் ரத்து
x
தினத்தந்தி 23 Jan 2019 4:15 AM IST (Updated: 23 Jan 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

ரேபரேலி தொகுதிக்கு செல்ல இருந்த சோனியா காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

ரேபரேலி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உத்தரபிரதேசத்தில் உள்ள அவர்களது சொந்த தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலிக்கு இன்று (புதன்கிழமை) செல்வதாக இருந்தது. ஆனால், சோனியா காந்தி தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். இத்தகவலை உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜிஷான் ஹைதர் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், ராகுல் காந்தி திட்டமிட்டபடி, இன்று தனது அமேதி தொகுதிக்கு 2 நாள் பயணமாக செல்கிறார். பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.

1 More update

Next Story