மராட்டியத்தில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணி - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


மராட்டியத்தில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணி - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x
தினத்தந்தி 20 Feb 2019 3:15 AM IST (Updated: 20 Feb 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

வசாய்,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாகின்தாஸ் பாடா பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வழியாக சிறுமி சாந்தினி (வயது 12) நடந்து சென்றாள். அப்போது கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துண்டு ஒன்று தவறி சிறுமியின் தலையில் விழுந்தது. அதில் இருந்த ஆணி சாந்தினியின் தலையின் முன் பகுதியில் புகுந்தது. உடனடியாக அவள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஆணி சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்து 9 மி.மீட்டர் அளவுக்கு புகுந்தது தெரியவந்தது. டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அந்த ஆணியை வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர். தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், ஒரு மாதத்துக்கு பிறகு அவளுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story