காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 2 என்ஜினீயர்கள் பலி


காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 2 என்ஜினீயர்கள் பலி
x
தினத்தந்தி 23 Feb 2019 7:00 PM GMT (Updated: 2019-02-23T22:58:23+05:30)

காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 2 என்ஜினீயர்கள் பலியாயினர்.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் நகரம் அருகே உள்ள இக்காலா–பந்தர்கோட் பகுதியில் நீர்மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 2 என்ஜினீயர்கள் உயிரிழந்தனர்.


Next Story