பாகிஸ்தான் மீதான வான் தாக்குதல் தொடரும் - பிரதமர் மோடி சூசக தகவல்
பாகிஸ்தான் மீதான வான் தாக்குதல் தொடரும் என்று பிரதமர் மோடி சூசகமாக கூறினார்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
ஒரு வேலை முடிந்ததும் (பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல்), எங்கள் அரசு தூங்கிவிடாது. ஆனால் அடுத்த வேலைக்கு தயாராகிவிடும். பெரிய மற்றும் கடுமையான முடிவுகள் எடுக்கும்போது நாங்கள் அதில் இருந்து பின்வாங்குவதில்லை.
நமது எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ, அது பாகிஸ்தான் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வருகிறது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், பூமிக்குள் பதுங்கியிருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து தாக்குவது தான் எங்களது கொள்கை.
இந்த வான் தாக்குதல் தேர்தலுக்காக செய்யப்பட்டது என்றால், 2016-ம் ஆண்டு முதல் துல்லிய தாக்குதல் நடத்தினோமே அப்போது எந்த தேர்தல் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு ஆமதாபாத்தில் ஆஸ்பத்திரி தாக்கப் பட்டபோது, டெல்லியில் பதவியில் இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்தவர்களுக்கு பாடம் கற்பிக்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Tags :
Next Story