எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி


எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 6 March 2019 2:45 AM IST (Updated: 6 March 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்செரா பகுதியில் நேற்று காலை இந்திய எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் கிராம பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கி சூடு மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இந்திய பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். உடனே பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. இந்த தாக்குதலில் யாருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ராணுவம் ரஜோரி, பூஞ்ச் எல்லை பகுதியில் 60 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பொதுமக்கள் 4 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.


Next Story