சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் அஜித்சிங் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் அஜித்சிங் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல், காங்கிரசுக்கு உதவ முன்வந்துள்ளன.
இந்நிலையில், இந்த கூட்டணியில், முன்னாள் மத்திய மந்திரி அஜித்சிங் தலைமையிலான ராஷ்டிரீய லோக்தளத்துக்கு மதுரா, பாக்பட், முசாபர் நகர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story