அமித்ஷா பயங்கரவாதிகளின் சடலத்தை எண்ணலாமே -தேசியவாத காங்கிரஸ்


அமித்ஷா பயங்கரவாதிகளின் சடலத்தை எண்ணலாமே -தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 7 March 2019 9:22 PM IST (Updated: 7 March 2019 9:22 PM IST)
t-max-icont-min-icon

அமித்ஷாவிடம் இரவுநேர பறவையின் சக்தி உள்ளதே, பயங்கரவாதிகளின் சடலத்தை அவரே எண்ணலாமே என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்திய விமானப்படை பாலகோட்டில் பயங்கரவாத முகாம்களை அழித்ததில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார். இதற்கிடையே எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டபோது, பாகிஸ்தான் சென்று பாருங்கள் எனவும் பா.ஜனதா தரப்பிலிருந்து பதில்வந்தது. இவ்விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனக்கூறி ஒவ்வொரு கட்சியும் அதனை செய்ய தவறுவதில்லை. இப்போது அரசியல் செய்யப்படுவதை தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது. பா.ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவையும் விமர்சனம் செய்துள்ளது.

இரவுநேர பறவையை போன்ற சிறப்பு சக்தி அமித்ஷாவிடம் உள்ளதே, அவர் பறந்து சென்று இரவில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதை எண்ணலாமே என தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டி.பி. திரிபாதி பேசுகையில், விமானப்படை  தாக்குதலுக்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு பின்னால் உறுதியாக இருந்தன, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை அரசியல்மயமாக்க முடியாது என்ற பொதுவான புரிந்துணர்வாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடி, அவரது அரசாங்கம், பா.ஜனதா  தலைமை இந்த விவகாரத்தை அரசியல்மயமாக்குகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் நமது ஆயுதப் படைகளின் தேசபக்தி, அர்ப்பணிப்பை அவமதித்துள்ளனர் என கண்டனம் தெரிவித்துள்ளார். 

Next Story