இந்தியாவுடான வான்மண்டலத்தில் 11 நுழைவு, வெளியேறும் பகுதிகளை பாகிஸ்தான் திறக்கவில்லை -விமானப்படை


இந்தியாவுடான வான்மண்டலத்தில் 11 நுழைவு, வெளியேறும் பகுதிகளை பாகிஸ்தான் திறக்கவில்லை  -விமானப்படை
x
தினத்தந்தி 7 March 2019 9:39 PM IST (Updated: 7 March 2019 9:39 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார்நிலையில் இருக்கிறோம் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடரும் நிலையில்,  இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
ஓமன், ஈரான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான வான்மண்டலத்தை மட்டுமே பாகிஸ்தான் திறந்து விட்டுள்ளது. ஆனால், இந்தியா–பாகிஸ்தான் வான்மண்டலத்தில் உள்ள 11 நுழைவு, வெளியேறும் பகுதிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இதை பார்க்கும்போது, பாகிஸ்தானிடம் இருந்து அச்சுறுத்தல் வரக்கூடும் என்று தெரிகிறது.

எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும், அதை சந்திக்க முழு தயார்நிலையில் இருக்கிறோம். பாகிஸ்தான் விமானப்படையின் அத்துமீறல்களை கண்டறியவும், முறியடிக்கவும் வான்பகுதியில் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். எல்லை ஓரம் உள்ள விமானப்படை தளங்கள் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story