பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது - காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஆமதாபாத்,
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் தேசிய நினைவு அரங்கில் நடைபெற்றது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அகமது பட்டேல் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 58 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுகிறது. மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க தண்டி யாத்திரை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கிய நாளில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பிரியங்கா கலந்துகொள்ளும் முதல் காரிய கமிட்டி கூட்டம் இது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் புலவாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பிரதமர் தேச பாதுகாப்பை இழிவான முறையில் வெளிப்படுத்துவது கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தனது மாபெரும் தோல்விகள், போலியான அறிவிப்புகள், தொடர் பொய்கள் ஆகியவற்றை மறைக்க இதுபோல திசைதிருப்புகிறார். அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும்.
இந்தியாவின் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியாவின் துணிச்சலான ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். வன்முறை அல்லது பயங்கரவாதம் மூலம் இந்திய படைகளை யாராலும் தோற்கடிக்க முடியாது.
சிறந்த நிர்வாகம், ஜனநாயக ஆட்சி அமைப்பு, பொருளாதார நிலையை சீர்செய்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சமூகநீதி மற்றும் அமைதி ஆகியவற்றை மீண்டும் திருத்தி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசில் அனைத்து பிரிவினரும், தொழில் நிறுவனங்களும் ஒரு அச்சமான சூழ்நிலையில் உள்ளன. இந்த நிலையை போக்க இந்திய மக்களை காங்கிரஸ் பணிவுடன் அணுகி தேர்தலில் ஆதரவு கேட்கிறது.
காங்கிரஸ் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருக்கிறது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தகவலை ஆனந்த் சர்மா தெரிவித்தார். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்கவும், திசைதிருப்பவும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று கூறியதாக ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

Related Tags :
Next Story