மக்களவை தேர்தல்: பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்பு: சரத் பவார் கணிப்பு
மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மும்பையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத் பவார் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, “நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஒருவேளை தனிப்பெரும் கட்சியாக தேர்வாகி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி 2 வது முறையாக அரியணையில் அமர வாய்ப்பில்லை” என்றார்.
மராட்டியத்தில் சிறிய கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திட்டத்தில் ஏற்படும் தொய்வு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், “ நாடாளுமன்ற தேர்தலில் ‘பி.டபுள்யூ.பி.’ கட்சி தேசியவாத காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சுவாபிமானி சேத்காரி சங்கதானா கட்சியுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளும் எங்களுடன் கூட்டணியில் இணைவார்கள்” என்றார்.
Related Tags :
Next Story