19-ந் தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி


19-ந் தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி
x
தினத்தந்தி 14 March 2019 4:00 AM IST (Updated: 14 March 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

19-ந் தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூலுக்காக ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை சீராக நடத்துவதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் 34-வது கூட்டம் 19-ந் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் துறைக்கான வரியை குறைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வருகிற கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 19-ந் தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவிப்பு அனுப்பி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story