மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 March 2019 11:23 PM IST (Updated: 14 March 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #MumbaiCSTBridgeCollapse

மும்பை,

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் ஏராளாமானோர் சிக்கினர். விபத்தில் காயமடைந்தோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 36 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான நடைமேம்பாலம் ரயில் நிலையத்தையும், அசாத் மைதான காவல் நிலையத்தையும் இணைக்கிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாகனங்கள் அவ்வழியாக செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காலையில் மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது என்றும் கூறப்படுகிறது.


Next Story