மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பதில் இந்தியாவுக்கு உலகளவில் ஆதரவு உள்ளது - ராகுலுக்கு சுஷ்மா சுவராஜ் பதில்
மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக அறிவிப்பதில் இந்தியாவுக்கு உலகளவில் ஆதரவு உள்ளது என ராகுலுக்கு சுஷ்மா சுவராஜ் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச குற்றவாளியாக ஐ.நா. அறிவிப்பதற்கு சீனா தடுத்ததால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை விமர்சனம் செய்திருந்தார். இதற்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ள பதில் வருமாறு:-
மசூத் அசார் பற்றிய பரிந்துரை 4 முறை நடைபெற்றுள்ளது. 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இந்தியா தனியாக பரிந்துரை செய்தது. 2016-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆதரவு தெரிவித்தது. 2017-லும் அந்த 3 நாடுகளும் பரிந்துரை செய்தன. ஆனால் இப்போது 2019-ல் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் 15-ல் 14 நாடுகள் ஆதரித்துள்ளன. உறுப்பினரல்லாத ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவுக்கு எதிர்பாராத அளவு ஆதரவு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story