பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உ.பியில் மதக்கலவரம் நடைபெறவில்லை: யோகி ஆதித்யநாத் சொல்கிறார்
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மதக்கலவரம் கூட நடைபெறவில்லை என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, ஒரு மதக்கலவரம் கூட நடைபெறவில்லை என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை தனது அரசு எடுத்து வருவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் இரண்டு ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகளை வெளியிட்டு பேசுகையில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்தார். மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பான சூழல், நாட்டுக்கே உதாரணமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story