ஜம்மு-காஷ்மீர்: சக வீரர் ஒருவரால் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொலை


ஜம்மு-காஷ்மீர்: சக வீரர் ஒருவரால் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 21 March 2019 1:45 AM IST (Updated: 21 March 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில், 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சக வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உதம்பூர்(ஜம்மு-காஷ்மீர்),

ஜம்மு-காஷ்மீரில் உதம்பூர் பகுதியில், 187 வது படைப்பிரிவின் 3 சி.ஆர்.பி.எப் படைவீரர்கள் நேற்று இரவு சக வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். அவரது நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது.

துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக, 187வது படைப்பிரிவின் தளபதி ஹரிந்தர் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “3 வீரர்கள்  இறந்துவிட்டனர், அவர்களை சுட்டுக் கொன்ற நபர் கடுமையாக காயமடைந்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story