2007-ம் ஆண்டிலேயே செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் திறன் இருந்தது - இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்


2007-ம் ஆண்டிலேயே செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் திறன் இருந்தது - இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்
x

2007-ம் ஆண்டிலேயே செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் திறன் இருந்தது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

விண்வெளியில் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா நேற்று வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் உலக அளவில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு பிறகு இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்த சோதனை நேற்று நடத்தப்பட்டாலும், 2007-ம் ஆண்டிலேயே இதற்கான திறமையை இந்தியா பெற்றிருந்தது என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘வானிலைக்கான பழைய செயற்கைகோள் ஒன்றை கடந்த 2007-ம் ஆண்டில் சீனா ஏவுகணை மூலம் அழித்தது. அப்போதே இந்தியாவும் அந்த திறனை பெற்றிருந்தது. எனினும் அதை நிறைவேற்றுவதற்கான அரசியல் ஆர்வம் அப்போது இல்லை. ஆனால் தற்போது இந்த திட்டத்தை பிரதமர் மோடி தைரியமாகவும், அரசியல் ஆர்வத்துடனும் செயல்படுத்தி இருக்கிறார். நமது சக்தியை ஒட்டுமொத்த உலகுக்கும் நாம் எடுத்துக்காட்டி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இஸ்ரோவின் தலைவராக கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009 வரை மாதவன் நாயர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story