காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
x
தினத்தந்தி 2 April 2019 12:57 AM IST (Updated: 2 April 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. அதில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடுகிறார்.

இந்த தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. இதுதவிர 5 கோடி ஏழை மக்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமான உத்தரவாத திட்டம், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, இளைஞர்கள் தொழில் தொடங்க கடன், சிறு வியாபாரிகள் நலன், ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி போன்ற பல திட்டங்களும் இதில் இடம்பெறும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story