ஒப்புகை சீட்டு எண்ணும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் அதிருப்தி


ஒப்புகை சீட்டு எண்ணும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் அதிருப்தி
x
தினத்தந்தி 9 April 2019 4:55 AM IST (Updated: 9 April 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

ஒப்புகை சீட்டு எண்ணும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி அதிருப்தி வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம்? என்பதை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டுகளை, ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதமாவது எண்ண வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளின் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என தேர்தல் கமி‌ஷனுக்கு நேற்று அறிவுறுத்தியது.

இதற்கு காங்கிரஸ் கட்சி அதிருப்தி வெளியிட்டு உள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘வெறும் 5 வாக்குச்சாவடிகளின் ஒப்புகை சீட்டுகளை மட்டும் எண்ணுவதில் எங்களுக்கு திருப்தி இல்லை. ஒரு குடிமகனாக நான் நினைப்பது என்னவென்றால், ஒப்புகை சீட்டுகளுக்காக ரூ.18 ஆயிரம் கோடி செலவழித்தால், அதன் மூலம் ஒவ்வொரு அரசியல்சாசன அதிகாரமும் உறுதிசெய்யப்பட வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், எவ்வித சந்தேகமும் இன்றி நடப்பதையும் ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story