மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிதரூர் எம்.பி. நலம்பெற ராஜ்நாத் சிங் வாழ்த்து - தொலைபேசியில் பேசினார்


மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிதரூர் எம்.பி. நலம்பெற ராஜ்நாத் சிங் வாழ்த்து - தொலைபேசியில் பேசினார்
x
தினத்தந்தி 18 April 2019 3:15 AM IST (Updated: 18 April 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிதரூர் எம்.பி. நலம்பெற தொலைபேசியில் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசிதரூர், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் துலாபாரம் கொடுத்த போது, தராசின் இரும்பு கம்பி தலையில் விழுந்து காயமடைந்தார். அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரை நேற்று பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது அவர், சசிதரூர் விரைவில் குணம் பெற வாழ்த்தும் தெரிவித்தார். இதற்கு டுவிட்டர் தளத்தில் சசிதரூர் எம்.பி. நன்றி தெரிவித்து உள்ளார்.

முன்னதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சசிதரூரை மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story