தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பிரதமர் குறித்து சித்து மீண்டும் சர்ச்சை கருத்து


தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பிரதமர் குறித்து சித்து மீண்டும் சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 11 May 2019 9:00 PM GMT (Updated: 11 May 2019 8:42 PM GMT)

தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடி குறித்து சித்து மீண்டும் சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.

இந்தூர்,

பஞ்சாப் மாநில மந்திரியும், காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளருமான நவ்ஜோத் சிங் சித்து மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அவரது பேச்சுக்கு விளக்கம் கேட்டு, 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்தநிலையில் இந்தூரில் நேற்று சித்து அளித்த பேட்டியில், திருமணம் முடிந்ததும் மணப்பெண் தன்னை மற்றவர்கள் உற்று நோக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கை வளையலை குலுக்கி சைகை செய்வார்.

அதுபோல பிரதமரும் தனது பேச்சை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதுபோல பேசி வருகிறார் என்று மீண்டும் பிரதமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.


Next Story