தேசிய செய்திகள்

சிகிச்சைக்காக உடல்நலம் குன்றிய பெண்ணை விமானத்தில் அனுப்பிய பிரியங்கா + "||" + Priyanka Gandhi Gets Private Jet, Treatment For Girl With Tumor

சிகிச்சைக்காக உடல்நலம் குன்றிய பெண்ணை விமானத்தில் அனுப்பிய பிரியங்கா

சிகிச்சைக்காக உடல்நலம் குன்றிய பெண்ணை விமானத்தில் அனுப்பிய பிரியங்கா
டெல்லியில் சிகிச்சை பெறுவதற்காக உடல்நலம் குன்றிய பெண்ணை, பிரியங்கா காந்தி விமானத்தில் அனுப்பி வைத்தார்.
பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை (சோனியா காந்தியின் தொகுதி) சேர்ந்த அன்ஷூ என்ற பெண் பிரயாக்ராஜில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதுபற்றி பிரியங்கா காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அவர் உடனே அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஒரு குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார். அந்த விமானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் பட்டேல், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், ராஜீவ் சுக்லா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி செல்ல இருந்தனர். அன்ஷூ அவரது பெற்றோர், ஹர்திக் பட்டேல், அசாருதீன் ஆகியோர் விமானத்தில் டெல்லி சென்று அந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜீவ் சுக்லாவுக்கு விமானத்தில் இடம் இல்லாததால் பின்னர் அவர் ரெயில் மூலம் டெல்லி சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பயணத்தின் போது தூங்கிவிட்டார்: விமானத்தில் தனித்துவிடப்பட்ட பெண் - பல மணி நேரங்களுக்கு பின் மீட்பு
பயணத்தின் போது தூங்கிய, விமானத்தில் தனித்துவிடப்பட்ட பெண் ஒருவர், பல மணி நேரங்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
2. டெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து துப்பாக்கி சூடு, கார் மீது முட்டைகள் வீச்சு
டெல்லியில் பெண் பத்திரிக்கையாளரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம்: அய்யாக்கண்ணு பங்கேற்பு
டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில், அய்யாக்கண்ணு பங்கேற்றார்.
4. டெல்லியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: மெட்ரோ ரெயில்கள் சேவை பாதிப்பு
டெல்லியில் பர்னிச்சர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மெட்ரோ ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லியில் கிரிமினல்களுக்கு ஆயுத சப்ளை செய்த முக்கிய நபர் கைது
டெல்லியில் கிரிமினல்களுக்கு ஆயுத சப்ளை செய்த முக்கிய நபரை போலீஸ் கைது செய்துள்ளது.