எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலுக்கு ஒப்புதல்: நாகாலாந்து சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலுக்கு ஒப்புதல்: நாகாலாந்து சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 May 2019 3:45 AM IST (Updated: 13 May 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலுக்கு ஒப்புதல் அளித்த நாகாலாந்து சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

கோகிமா,

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியான தேசிய மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்னாடிபா, எல்.குமோ ஆகிய எம்.எல்.ஏ.க்கள் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியில் சேர்ந்தனர். அதை சபாநாயகர் விகோ ஓ யோசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தார்.

ஆனால், கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தேசிய மக்கள் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

2 எம்.எல்.ஏ.க்களையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் கோரி, சபாநாயகருக்கும், 2 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story