பிரதமர் மோடி பற்றி மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்த கருத்து - காங்கிரஸ் சொல்கிறது
பிரதமர் மோடி பற்றி மணிசங்கர் அய்யர் கூறியது, அவரது சொந்த கருத்து என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி பிரதமர் மோடி விமர்சித்தநிலையில், அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் எழுதிய ஒரு கட்டுரையில், ‘‘நாடு கண்ட பிரதமர்களிலேயே மோடிதான் மிகவும் கீழ்த்தரமாக பேசுபவர்’’ என்று அவர் கூறியுள்ளார். ‘இழிபிறவி’ என்று மோடியை பற்றி ஏற்கனவே கூறியதையும் அவர் நியாயப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், இதுபற்றி கேட்டதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் கூறியதாவது:-
மணிசங்கர் அய்யர் கருத்து, அவரே கூறியபடி அவரது சொந்த கருத்து. அந்த கருத்தை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, வெட்கப்படவும் இல்லை. ஆனால், பிரதமர் அலுவலகத்தின் தரத்தை தாழ்த்தியதற்கு மோடிதான் வெட்கப்பட வேண்டும். தான் பயன்படுத்திய வசைமொழிகளுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story