எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு? தந்தி டிவி கருத்துக்கணிப்பு


எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 19 May 2019 9:08 PM IST (Updated: 19 May 2019 9:08 PM IST)
t-max-icont-min-icon

எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


 சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.  தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

சிவகங்கை தொகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. 

சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இங்கு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு  36-42  சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 32-38 சதவீத பேர் தெரிவித்துள்ளனர். அமமுகவிற்கு என்று 14-20 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8  சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அமமுகவும் இங்கு வாக்கை பிரிக்கிறது என்பது தெரிகிறது.
1 More update

Next Story