ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 23 May 2019 5:29 PM IST (Updated: 23 May 2019 5:29 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது.  அதன்படி, 176 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  ஆந்திர பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள்.  பதவி காலத்தில் வெற்றியுடன் செயல்பட உங்களுக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.
1 More update

Next Story