காந்திநகர் தொகுதியில் அமித்ஷா, 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி


காந்திநகர் தொகுதியில் அமித்ஷா, 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 1:12 AM IST (Updated: 24 May 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

காந்திநகர் தொகுதியில் அமித்ஷா, 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

காந்திநகர்,

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சவ்டா களமிறங்கினார்.

இந்த தொகுதியில் அமித்ஷா 8.94 லட்சம் வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சவ்டாவுக்கு 3.37 லட்சம் வாக்குகளே கிடைத்தன. இதன்மூலம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தின் நட்சத்திர தொகுதியான காந்திநகர், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் சொந்த தொகுதி என்பதும், இந்த தேர்தலில் அவர் போட்டியிட ‘சீட்’ வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story