தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Ashok Gehlot accuses BJP of destabilizing state governments of opposition parties

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மீண்டும் மத்தியில் அமைய உள்ளது.  மோடி அரசு இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

பா.ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் முன்னதாகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுக்கு தொல்லை கொடுக்கிறது, அரசை கலைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசோக் கெலாட், புதிய அரசை அமைப்பதற்கு முன்னதாகவே வெற்றி பெற்ற பா.ஜனதா, மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தொந்தரவை கொடுக்கவும், கலைக்கவும் முயற்சிகளை மேற்கொள்கிறது எனக் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காங்கிரஸ் அரசை பா.ஜனதா வலியுறுத்துகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் - தி.மு.க. வெளிநடப்பு
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை தமிழர்களை சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
3. 73-வது பிறந்த நாள்: சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து - காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வாழ்த்தினர்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
4. மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார் ராகுல்காந்தி?
மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.