மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: ராஜ்நாத் சிங்-ராணுவம், ஜெய்சங்கர்-வெளியுறவு, அமித்ஷா-உள்துறை மந்திரி, நிர்மலா சீதாராமன்-நிதி மந்திரி
அமித்ஷா உள்துறை மந்திரியாகவும், நிர்மலா சீதாராமன் நிதி மந்திரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ இலாகாவும், ஜெய்சங்கருக்கு வெளியுறவு இலாகாவும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடி 2-வது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார்.
அவருடன் 24 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 9 பேர் தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாகவும், 24 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
மோடிக்கும், மந்திரிகளுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மோடி மந்திரிசபையில் கூட்டணி கட்சிகளும் இடம்பெற்று உள்ளன. மந்திரிசபையில் பிரதமரையும் சேர்த்து மொத்தம் 58 பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
மத்திய மந்திரிசபையில் உத்தரபிரதேசத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் மந்திரிசபையில் இடம்பெற்று இருக்கிறார்கள்.
அதற்கு அடுத்ததாக மராட்டியம் சார்பில் 8 பேரும், மத்தியபிரதேசம், பீகார் சார்பில் தலா 5 பேரும், கர்நாடகத்தின் சார்பில் 4 பேரும், குஜராத், ராஜஸ்தான், அரியானா சார்பில் தலா 3 பேரும், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜார்கண்ட் சார்பில் தலா 2 பேரும், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், காஷ்மீர், அசாம், அருணாசலபிரதேசம், கோவா, டெல்லி, கேரளா சார்பில் தலா ஒருவரும் மந்திரிசபையில் இடம்பெற்று இருக்கிறார்கள்.
பிரதமர் ஆலோசனையின்படி மந்திரிகளுக்கான இலாகாக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒதுக்கீடு செய்து உள்ளார்.
இலாகா ஒதுக்கீடு விவரம் வருமாறு:-
ராஜ்நாத் சிங்குக்கு மந்திரிசபையில் 2-வது இடம் அளிக்கப்பட்டு உள்ளது. முந்தைய மோடி அரசில் உள்துறையை கவனித்து வந்த இவருக்கு இப்போது ராணுவ இலாகா ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், பாரதீய ஜனதா தலைவருமான அமித்ஷாவுக்கு மந்திரிசபையில் 3-வது இடம் வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய மந்திரிசபையில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகிய இரு தமிழர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தவர். டெல்லியில் பிறந்த தமிழரான ஜெய்சங்கர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர்.
முந்தைய அரசில் அருண் ஜெட்லி கவனித்து வந்த நிதி இலாகா தற்போது நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் முந்தைய அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார்.
முன்பு வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். வெளிநாட்டு விவகாரங்களை கையாளுவதில் மிகுந்த அனுபவம் பெற்றவர் என்பதால் இவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிதின் கட்காரிக்கு அவர் முன்பு கவனித்து வந்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையும், பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு, முன்பு அவர் கவனித்து வந்த உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகார இலாகாவும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சதானந்த கவுடாவுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பியூஸ் கோயலுக்கு ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் இலாகாவும், ஸ்மிரிதி இரானிக்கு பெண்கள், குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி இலாகாவும், ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்ட இலாகாவும், பிரகாஷ் ஜவடேகருக்கு சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகாவும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
தர்மேந்திர பிரதான் பெட்ரோலிய துறை மந்திரியாகவும், முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாகவும், நரேந்திர சிங் தோமர் விவசாய மந்திரியாகவும், ரமேஷ் பொக்ரியால் மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியாகவும், ஹர்ஷவர்தன் சுகாதார துறை மந்திரியாகவும், ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நீர்வளம், குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு ஆகிய இலாகாக்களை ஒன்றாக இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள ஜலசக்தி இலாகா கஜேந்திர சிங் செகாவத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் மற்ற மந்திரிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Related Tags :
Next Story