இணையதளத்தில் வெளியான ஓட்டு விவரங்கள் தற்காலிகமானது தான் - தேர்தல் கமிஷன் விளக்கம்


இணையதளத்தில் வெளியான ஓட்டு விவரங்கள் தற்காலிகமானது தான் - தேர்தல் கமிஷன் விளக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2019 2:38 AM IST (Updated: 2 Jun 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

இணையதளத்தில் வெளியான ஓட்டு விவரங்கள் தற்காலிகமானது தான் என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், சில மாநிலங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் எண்ணிக்கை போன்றவைகளில் முரண்பாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியான பதிவான வாக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள் தற்காலிகமானது தான். இது இறுதியானது அல்ல. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவ்வப்போது தொலைபேசி மூலம் தெரிவித்த தகவல்கள் தான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவானவை, தபால் ஓட்டுகள் என 2 வித ஓட்டுகளும் உள்ளன. எனவே அதில் உள்ள எண்கள் இடைக்காலமானது தான். அவைகள் மாற்றத்துக்கு உரியது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Next Story