காஷ்மீரில் 5 மாதங்களில் 101 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 5 மாதங்களில் 23 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 101 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் உள்ளூர் இளைஞர்கள் சேரும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே 50 இளைஞர்கள் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர்.கடந்த 5 மாதங்களில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 23 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 101 பயங்கரவாதிகள் இறந்தனர்.
குறிப்பாக சோபியன் பகுதியில் 25 பேரும், புல்வாமாவில் 15 பேரும், அவாந்திபோராவில் 14 பேரும், குல்காமில் 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் கொல்லப்படும் பயங்கரவாதிகள் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டில் 53 பேரும், 2015-ல் 66 பேரும், 2016-ல் 88 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘பயங்கரவாத அமைப்புகளில் காஷ்மீர் இளைஞர்கள் சேருவதை தடுக்க அவர்களின் குடும்பத்தினருக்கு பயங்கரவாதத்தின் தன்மையை உணர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்
Related Tags :
Next Story