போலீசாரை கடத்தியதாக மே.வங்காள பா.ஜனதா பிரமுகர் கைது


போலீசாரை கடத்தியதாக மே.வங்காள பா.ஜனதா பிரமுகர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2019 1:29 AM IST (Updated: 5 Jun 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரை கடத்தியதாக மே.வங்காள பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் ராகேஷ் குமார் சிங். மேற்கு வங்காளத்தில் நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுக்கு முந்தையான நாளான மே 18-ந் தேதி, அவர் 2 போலீசாரை கடத்திச்சென்று அடைத்து வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. வேறு சில குற்றவியல் வழக்குகளும் உள்ளன.

இந்நிலையில், ராகேஷ் குமார் சிங் நேற்று கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து விமானத்தில் கொல்கத்தாவுக்கு வந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இவர், மேற்கு வங்காளத்தில் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்தவர். கடந்த மார்ச் 11-ந் தேதி, பா.ஜனதாவில் இணைந்தார்.

Next Story