2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்


2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்
x
தினத்தந்தி 13 Jun 2019 3:02 AM IST (Updated: 13 Jun 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

2,100 விவசாயிகளின் கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தினார்.

மும்பை,

நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பரிவு காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 1,398 பேருக்கும், மராட்டியத்தை சேர்ந்த விவசாயிகள் 350 பேருக்கும் பயிர்க்கடனை செலுத்தினார்.

தற்போது அவர் பீகாரை சேர்ந்த 2 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கான பயிர்க்கடனை செலுத்தி உள்ளார். இவர்கள் வங்கியில் இருந்து பயிர்க்கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்கள். இவர்களில் சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து மகள் சுவேதா, மகன் அபிஷேக் பச்சன் கையினால் பயிர்க்கடனுக்கான பணத்தை வழங்கியதாகவும், மற்றவர்களுக்கு வங்கிகள் மூலமாகவே கடனை திருப்பி செலுத்தியதாகவும் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.


Next Story