‘‘வங்க மொழி பேச கற்றுக்கொள்ள வேண்டும்’’ - மேற்கு வங்காளத்தில் வசிப்பவர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்


‘‘வங்க மொழி பேச கற்றுக்கொள்ள வேண்டும்’’ - மேற்கு வங்காளத்தில் வசிப்பவர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jun 2019 4:45 AM IST (Updated: 15 Jun 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் வசிப்பதாக இருந்தால், வங்க மொழி பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் காஞ்சிரபாரா என்ற இடத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அதில், முதல்–மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். மாநிலத்தில் நடந்து வரும் டாக்டர்கள் போராட்டம் பற்றி அவர் ஆவேசமாக பேசினார்.

அவர் பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தில் நடந்து வரும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தை வெளிநபர்கள்தான் தூண்டி விடுகிறார்கள். நேற்றைய போராட்டத்தில் வெளிநபர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக நான் கூறியது சரியானதுதான். வெளிநபர்கள் கோ‌ஷம் போடுவதை நான் பார்த்தேன்.

சிறுபான்மையினரையும், வங்காளிகளையும் பா.ஜனதா குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் முன்கூட்டியே தில்லுமுல்லு செய்துதான் அவர்கள் மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்.

அப்படி வெற்றி பெற்று விட்டதற்காக, வங்காளிகளையும், சிறுபான்மையினரையும் அடிக்கலாம் என்று அர்த்தம் அல்ல. அதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். அந்த குண்டர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.

மேற்கு வங்காளத்தில் வசிப்பதாக இருந்தால், ஒவ்வொருவரும் வங்காள மொழி பேச கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story