தேசிய செய்திகள்

கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி + "||" + Rahul Gandhi says he will not decide on his successor as Congress chief party will

கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி

கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும். என்னுடைய தலையீடு இருக்காது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது. தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை கட்சி தலைமை ஏற்கவில்லை. இருப்பினும் தன்னுடைய நிலைப்பாட்டில் ராகுல் காந்தி தீவிரமாக இருந்து வருகிறார். விரைவில் கூடவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.  

இந்நிலையில் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. 

ராகுல் காந்தி இதற்கு பதில் அளிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் என்னுடைய தலையீடு இருக்காது.  தலைவரை தேர்வு செய்வது வெளிப்படையாகவே நடக்கிறது எனக் கூறினார். ரபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது எனும் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை
வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் என கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
2. மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?
மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
3. காங்கேயம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை: ஓட்டலுக்குள் புகுந்து மதுபாட்டில்களை அள்ளிய பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
காங்கேயம் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஓட்டலை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தியதோடு, திடீரென்று ஓட்டலுக்குள் புகுந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை அள்ளினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது.
5. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.