குவிண்டாலுக்கு ரூ.65 அதிகரிக்கும்: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மத்திய மந்திரி தகவல்


குவிண்டாலுக்கு ரூ.65 அதிகரிக்கும்: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 4 July 2019 1:30 AM IST (Updated: 4 July 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.65 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி 2019-20-ம் ஆண்டு பயிர் பருவத்துக்கான நெல் உள்ளிட்ட பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று தெரிவித்தார்.

அதன்படி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.65 (3.70 சதவீதம்) உயர்த்தப்பட்டு ரூ.1,815 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சோளத்துக்கு ரூ.120-ம், ராகிக்கு ரூ.253-ம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல துவரம் பருப்பு, பாசி பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புக்கு முறையே ரூ.215, ரூ.75 மற்றும் ரூ.100 அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறிய தோமர், நிலக்கடலைக்கு ரூ.200-ம், சோயா பீன்சுக்கு ரூ.311-ம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தவிர நடுத்தர பருத்திக்கு ரூ.105 மற்றும் நீண்ட பருத்திக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு உள்ளது.


Next Story