பட்ஜெட் 2019 தாக்கலையொட்டி சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டது


பட்ஜெட் 2019 தாக்கலையொட்டி சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
x
தினத்தந்தி 5 July 2019 9:52 AM IST (Updated: 5 July 2019 9:58 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ந்தேதி பதவி ஏற்றது.  நிதி மந்திரியாக தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் அவர் 2019-20ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.  பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார். இது அவரது முதல் பட்ஜெட் ஆகும்.  இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலையொட்டி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 119.15 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 27 புள்ளிகளாக உயர்வடைந்து காணப்பட்டது.

Next Story