மது அருந்தியவர்களால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை - நிதின் கட்காரி தகவல்
மது அருந்தியவர்களால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நிதின் கட்காரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவரால் ஏற்படும் விபத்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி எழுத்து மூலம் பதிலளித்தார்.
அதில் அவர் கூறுகையில், ‘மது அருந்தியவர்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பல்வேறு பிரிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும். எனவே மேற்படி சட்டத்தின் 185-வது பிரிவை (குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டும் வழங்கப்படும்) தீவிரமாக செயல்படுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு உள்ளோம்’ என குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல நெடுஞ்சாலை ஓரங்களில் மதுக்கடைகளை நிறுவுவதற்கு உரிமம் வழங்கக்கூடாது எனவும், ஏற்கனவே உரிமம் வழங்கி இருந்தால் அது குறித்து மறுஆய்வு செய்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
இதைத்தவிர மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கட்காரி அந்த பதிலில் தெரிவித்தார்.

Related Tags :
Next Story