பட்ஜெட்

17 முக்கிய இடங்கள் உலகத்தர சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு + "||" + Budget announcement of 17 major attractions to be converted into world-class tourist destinations

17 முக்கிய இடங்கள் உலகத்தர சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

17 முக்கிய இடங்கள் உலகத்தர சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு
இந்தியாவில் உள்ள 17 முக்கிய இடங்கள் உலகத்தர சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் என்று பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் இதுபற்றி கூறியிருப்பதாவது:-

இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிப்பதற்காக 17 முக்கிய இடங்களை மத்திய அரசு உலகத்தர சுற்றுலா தலங்களாக கட்டமைக்கும்.


50 ஆயிரம் கைவினைஞர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் நாட்டில் 100 புதிய கைவினை கூடங்கள் 2019–20–ம் ஆண்டில் உருவாக்கப்படும். பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட நபர்களை உலக சந்தையுடன் ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கு காப்புரிமைகள் பெற்றுத்தரவும் மத்திய அரசு ஒரு திட்டத்தை தொடங்கும்.

நாட்டின் மதிப்புமிக்க பழங்குடியினர் கலாசாரத்தை பாதுகாக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இதற்காக பழங்குடியினர் டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும். இதில் போட்டோக்கள், வீடியோக்கள், அவர்களின் பிறப்பிடம் பற்றிய விவரங்கள், கல்வி, வாழ்க்கை முறை, திறமைகள், பாரம்பரிய கலைகள் மற்றும் இதர மானுடவியல் தொடர்பான தகவல்கள் இதில் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.