மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்


மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 6 July 2019 4:00 AM IST (Updated: 6 July 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி ஆவார்.

புதுடெல்லி,

தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மத்தியில் நிதி மந்திரி பதவி வகித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள், ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் மற்றும ப. சிதம்பரம் ஆவார்கள்.

இப்போது தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது மத்திய நிதி மந்திரி என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்று இருக்கிறார். இவர் நேற்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இவருக்கு மற்றொரு சிறப்பும் சேர்கிறது. அது பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண் நிதி மந்திரி என்ற சிறப்பு ஆகும்.

இதற்கு முன்பு இந்திரா காந்தி நாட்டின் முதல் பெண் நிதி மந்திரி என்ற சிறப்பை பெற்றுள்ளார். அவர் 1970-ம் ஆண்டு 1970-71 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இப்போது நிர்மலா சீதாராமன் 2019-20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை மிக நீண்டதாகும். அவர் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.


Next Story