அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்: பீகார் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி - ராஷ்டிரீய ஜனதாதளம் அறிவிப்பு


அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்: பீகார் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி - ராஷ்டிரீய ஜனதாதளம் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 July 2019 4:00 AM IST (Updated: 7 July 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில், பீகார் முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி நியமனம் செய்வதாக ராஷ்டிரீய ஜனதாதளம் அறிவித்துள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்ட முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் காமர் ஆலம், மாநில தலைவர் ராம்சந்திர புர்வே ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டமன்ற தேர்தலை தேஜஸ்வி பிரசாத் யாதவ் தலைமையில் சந்திப்போம். தேஜஸ்வி இந்த தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக போட்டியிடுவார் என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான ஆலோசனைகளை கட்சி தலைவர் லாலுபிரசாத் வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தேஜஸ்வி, லாலுபிரசாத் யாதவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story