மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைகிறார்களா?
மே.வங்காளத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் சமீபத்தில் ராஜினாமா செய்ததும், பாஜகவில் இணைந்து அம்மாநில அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 107 எம்.எல்.ஏக்களும் தன்னிடம் தொடர்பில் இருப்பதாகவும் முகுல் ராய் கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முகுல் ராய் பாஜகவில் இணைந்தது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story