வருமான வரி கணக்கு தாக்கலுக்கான விண்ணப்பத்தில் மாற்றம் இல்லை - மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்


வருமான வரி கணக்கு தாக்கலுக்கான விண்ணப்பத்தில் மாற்றம் இல்லை - மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்
x
தினத்தந்தி 17 July 2019 3:06 AM IST (Updated: 17 July 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான விண்ணப்பத்தில் மாற்றம் இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதியுடன் முடிகிறது. சமூக வலைத்தளங்களில் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான விண்ணப்பங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது வரி கட்டுபவர்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதாகவும் தகவல்கள் பரவியது. இதைத்தொடர்ந்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான ஐ.டி.ஆர்.-2, ஐ.டி.ஆர்.-3 உள்ளிட்ட விண்ணப்பங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் இதற்கு பயன்படும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் பயன்படுத்துவோர், கணக்கு தாக்கல் செய்பவர்களிடம் இருந்து தொடர்ந்து பெற்ற ஆலோசனைகளின்படியே ‘அப்டேட்’ செய்யப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு சிரமத்தை ஏற்படுத்தாது. இதன்மூலம் இதுவரை 1.38 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story