மேற்கு வங்காளம்- பீகார் ஆளுநர்கள் மாற்றம்


மேற்கு வங்காளம்- பீகார் ஆளுநர்கள் மாற்றம்
x
தினத்தந்தி 20 July 2019 8:42 AM GMT (Updated: 2019-07-20T14:12:56+05:30)

மேற்கு வங்காளம்- பீகார் மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி

மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல் உத்தரபிரதேச ஆளுநராகவும், பீகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்திய பிரதேச ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்காள ஆளுநராக ஜகதீப் தாங்கர், பீகார் ஆளுநராக பிரகு சவுகான், நாகலாந்து ஆளுநராக ரவி, திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Next Story