மராட்டியத்தில் கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலி


மராட்டியத்தில் கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலி
x
தினத்தந்தி 21 July 2019 3:45 AM IST (Updated: 21 July 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலியாயினர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே யாவத் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 9 பேர் நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்துக்கு காரில் சுற்றுலா சென்றுவிட்டு, இரவு புனேக்கு புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் மைய தடுப்பு சுவரில் மோதி நின்றது. அப்போது எதிரே வந்த லாரி, அந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று புனே பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

1 More update

Next Story