காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்


காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2019 11:14 AM IST (Updated: 3 Aug 2019 11:14 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

புதுடெல்லி, 

ஜம்மு காஷ்மீரில்  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,  அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.  ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் எனவும் இதற்கான அறிவிப்பை  சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த புதிய  திட்டத்தை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. 

Next Story