தேசிய செய்திகள்

குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் தற்கொலை + "||" + t is the young man who shot 5 of the family, Suicide by himself

குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் தற்கொலை

குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் தற்கொலை
பஞ்சாப்பில், குடும்பத்தினர் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மோகா,

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டம் நாதுவால் கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப்சிங் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பாட்டி, தந்தை, தாய், சகோதரி, தனது 3 வயது மகள் ஆகியோரை கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். துப்பாக்கியால் சுட்டதில் அவரது தாத்தா குண்டு காயத்துடன் தப்பினார். அவர்களை சுட்டபின்னர், சந்தீப்சிங்கும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.


அவர் தனது குடும்பத்தினரை சுட்டுக் கொன்றதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த பயங்கர சம்பவம் குறித்து பாகாபுரானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். சந்தீப்சிங்கின் தாத்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.