கற்காலத்துக்கு திரும்பிய காஷ்மீரின் நிலை - டெல்லி திரும்பிய பயணிகள் வேதனை
காஷ்மீரின் நிலை கற்காலத்துக்கு திரும்பி உள்ளதாக, டெல்லி திரும்பிய பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
புதுடெல்லி,
காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், ஊழியர்கள் என பலர் நேற்று விமானம் மூலம் டெல்லி திரும்பினர். அவர்களில் சிலரிடம் காஷ்மீரின் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்று கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட முடிவும், இதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளும் அங்கு அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள, தொலைபேசி இணைப்புகள் இல்லை. செல்போன் செயலிழந்தது. கேபிள் டி.வி.யும் வேலை செய்யவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் முடியவில்லை. சொந்த வீட்டில் சிறையில் வைத்தது போல இருந்தது. ஏதோ கற்காலத்துக்கு மீண்டும் திரும்பிவிட்டதுபோல இருந்தது. விமான நிலையத்துக்கு எப்படி சென்றேன் என்பதே தெரியவில்லை. விமான நிலையம் செல்வதற்கு 4 மணி நேரம் ஆனது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story