காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் - தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தல்


காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் - தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2019 3:22 AM IST (Updated: 11 Aug 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஜம்மு,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் முன்னாள் முதல்-மந்திரிகளும், தேசிய மாநாடு கட்சி தலைவர்களுமான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோரும் அடங்குவர்.

இந்த தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு தேசிய மாநாடு கட்சி வலியுறுத்தி உள்ளது. ஜம்முவில் நேற்று நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் அந்த கட்சி தலைவர்கள் கூறுகையில், ‘மதசார்பற்ற மற்றும் ஜனநாயக இந்தியாவின் சித்தாந்தங்கள் ஆபத்தில் இருக்கின்றன. நாட்டின் இந்த பிராந்தியம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. காஷ்மீரை சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவரை இல்லாதது மட்டுமின்றி மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாகும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் 1975-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நெருக் கடி நிலையை விட மோசமானது எனக்கூறியுள்ள அவர்கள், காஷ்மீர் மாநிலம் தனது அடையாளத்தையும், மாநில அந்தஸ்தையும் இழந்து இருக்கிறது என்றும் கூறியிருந்தனர்.


Next Story