சுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் நரேந்திரமோடி

சுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திரமோடி பேசினார் .
புதுடெல்லி,
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, சுதந்திர தின உரையாற்றினார். தனது அரசின் சாதனைகள், நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கமாக மோடி பேசினார். தண்ணீர் பிரச்சினை குறித்து பேசிய மோடி,
நீர் பிரச்னையை தீர்க்க ஜல் ஜீவன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி, திருவள்ளுவர் கூறியது போல், "நீரின்றி அமையாது உலகு". 70 ஆண்டுகளில் செய்யாததை 4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம். விவசாயம், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டிய தருணம் இது. பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர், தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார். அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
Related Tags :
Next Story






